உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 பலநூறு கூலிகளை வேலையில் வைத்துக் நாள் தோறும் அதற்காக கொள்கிறார்கள். மண்டபத்திலிருந்து இந்தக் தொழிலாளிகள் போய் வருவதற்காக 'கூலி டிரயின்'களை ஓட்டுகிறார்கள். இதுபோல, . தண்ணீர் டிரயின் களும் போய் வருகின்றன. ராமேசுவரம் தீவில் நீர் கிடைக்காது. உப்பில்லாத் தண்ணீர் மண்ட, பத்திற்கு வடக்கேயிருந்துதான் தீவுக்குச் செல்ல வேண்டும். தனுசுகோடிக்கு முதலில் இரயில் வசதி செய்யத் திட்டமிட்டபோது பாம்பனிலிருந்து இராமேசுவரத் திற்கும். இராமேசுவரத்திலிருந்து கரையோரமாக தனுசுகோடிக்கும் இரயில் பாதை போடப்பெற்றது கடல் காற்றால் இராமேசுவரம் - தனுசுகோடி பாதை பாதிக்கப்பட்டபோது இராமேசுவரத்திலிருந்து இரா மேசுவரம் ரோடு என்ற இரயில் நிலையத்திற்கும் அங் கிருந்து தனுசுகோடிக்கும் இரயில் பாதை போடப் பெற்றது. பிறகு பாம்பனும் இராமேசுவரம் ரோடு இரயில் நிலையமும் இணைக்கப் பெற்றன. இந்த இணைப்புப் பாதை, பல்லாண்டுகளுக்குமுன் புயலால் அழிந்தது. பாம்பன் கால்வாய்: மண்டபத்துக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்டது இந்தக் கால்வாய். இது பாம்பைப்போல் நெளிந்து ஓடுவதால் இவ்வாறு பெயர் பெற்றிருக்கிறது. இதைத் தாண்டித்தான் இராமேசுவரம் தீவுக்குப் பாக வேண்டும். எந்தச் செயலிலாவது ஈடுபடும்போது ஒரு தடை ஏற்பட்டால், "இராமேசுவரத்துக்குப் போகும் போது பாம்பன் ஆறு குறுக்கிட்டாற்போல்' என்ற பழமொழி வழங்கி வருகிறது.