உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வரம் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் புறப்பட்டு மறுநாள் இராமேகவரத்தை அடைந்தது. இதே கங்கூலிதான் பாகிஸ்தான் பிரிவினையால் வட கிழக்கு இந்தியாவில் துண்டிக்கப் பெற்ற பகுதிகளுக்குத் திறமையாக புதிய இரயில் பாதைகளை அமைத்து இந்தியாவின் போக்குவரத்தையும் பொருளாதாரத்தை யும் காப்பாற்றியவர். 1971-இல் இரயில்வே அமைச்சர் அநுமந்தையாவுக்கும் (அப்போது இரயில்வே போர்டின் தலைமைப் பதவி வகித்த) கங்கூலிக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் கங்கூலி பதவியைவிட்டு நீக்கப் பட்டார். கப்பல் பழுதுபார்க்கும் பட்டறை: மண்டபத்தில் கப்பல் பழுது பார்க்கும் வசதியை இரயில்வேத் துறையினர் செய்திருக்கிறார்கள். இதற்கு Railway's Dry Dock என்று பெயர். இராமேசுவரம்- தலைமன்னார் கப்பலைப் பழுது பார்ப்பதற்காக இது ஏற் பட்டது. பிற கப்பல்களையும் இங்கு பழுது பார்த்துக் கொடுக்கிறார்கள். இந்த நிலையத்தைப் பற்றிய விவரங்கள்:- நீளம் நுழைவாயில் அகலம் ஆழம் O er all at low water Over all at high water 264 அடி. 50 அடி. 6.50 44 9.08 அடி 1,000 டன் (deadweight including the weight of ballast coal and water) எடைக்கு உள்பட்டதும் 260. அடிக்குக் குறைந்த நீளமுடையது மாகிய கப்பல்களை இங்கு பழுதுபார்த்துக் கொடுக்கிறார்கள், பழுது பார்ப்