131 பதற்கு 875 ரூபாய் கட்டணமும் ஒவ்வொரு நாளுக்கும் 187-50 ரூபாய் வாடகையும் வசூலிக்கின்றனர். இந்தத் தளத்தை மேற்பார்வை செய்ய மண்டபத்தில் ஒரு Marine Superintendent இருக்கிறார். விமானப் போக்கு வரத்து: இந்தியாவில் ஆகாய விமானப் போக்கு வரத்தை வளர்த்ததில் இம்மாவட்டத்தாருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆகாயவிமானம் ஓட்டும் லைசென்சை முதலில் பெற்ற இந்தியா கானாடு காத்தான் சா. அ. அ. அண்ணாமலைச் செட்டியார் ஆவார். ஜே.ஆர்.டி டாட்டாவிற்கு முன்னரே இவர் லைசென்ஸ் பெற்றார். சென்னை ஆகாயவிமான நிலையம் வளர்ச்சி அடைந்த வரலாற்றிலும் சென்னை- கொழும்பு விமானப் போக்கு வரத்து ஏற்பாட்டிலும், சென்னையில் விமானம் ஓட்டி கள் சங்கம் நிறுவியதிலும் இவருக்குப் பங்கு உண்டு. இவருக்கு ஏரோப்பிளேன் அண்ணாமலை செட்டியார் என்று பெயர். கானாடு காத்தானில் இவர் வீட்டிலேயே ஓர் ஆகாய விமானத்தை நிறுத்தி வைத்திருந்தார். 1948 இல் ஹைதராபாத்தில் ரஜாக்கர் கலகம் ஏற்பட்டது. அதனால் இந்தியாவுக்குள் உள்நாட்டு விமானப் போக்கு வரத்துப் பாதிக்கப்படாதவாறு செய்தவர் டாக்டர் அழகப்ப செட்டியார். ஜூப்பிட்டர் ஏர்லைன்ஸ்' என்ற விமானக் கம்பெனியையும் அவர் நடத்தினார். விமானி லைசென்ஸ் பெற்ற செட்டியார்கள் பலர் இருந்ததாலும் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியா ரவர்களின் பேராதரவாலும் செட்டி நாடு விமான நிலையம் 1930 இல் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/133
Appearance