133 குளத்தூர், சிவகங்கை வட்டங்கள் பிற்பட்ட பகுதி களாய் இருப்பதால் அங்கு அஞ்சல் நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. விருதுநகர், இராஜ பாளையம், இராமநாதபுரம், காரைக்குடி நகர்களில் தலைமை அஞ்சல் நிலையங்கள் உள்ளன. தேவகோட்டை, மானாமதுரை, சிவகங்கை நகர்களிலும் தலைமை அஞ்சல் நிலையங்கள் நிறுவ வாய்ப்பு இருக்கிறது. இலங்கைக்கும், இலங்கையிலிருந்தும் அஞ்சல்கள் இராமேசுவரம் துறைமுகம் வழியாக ஓர் ஆண்டில் பதினொரு மாதங்களில் அனுப்பப்படுகின்றன. இந்திய அரசைச் சேர்ந்த Shipping Corporation of India வின் கப்பல்களில் அஞ்சல் பைகள் செல்லு கின்றன. குறிப் புதுக்கோட்டையிலிருந்து இம்மாவட்டத்திலுள்ள நெற்குப்பைக்கு மெயில் வேன் வசதியிருப்பது பிடத்தக்கது, தந்தி, தொலைபேசி வசதிகள்! மாவட்டத்தின் பல இடங்களில் தந்தி நிலையங்கள் உள்ளன. சில ஊர்களில் Phono-com அலுவலகங்கள் இருக்கின்றன. நூறு ஊர்களில் அஞ்சல் நிலையங்களில் தொலை பேசி வசதி இருக்கிறது. இம்மாவட்டத்திலுள்ள தொலை பேசி இணைப்பகங்களின் முழுப் பட்டியல் கிடைக்கவில்லை சிலவற்றை மட்டும் இங்கே தருகிறோம். காரைக்குடி தேவகோட்டை செட்டிநாடு புதுவயல் கீழைச் சிவற்பட்டி திருப்பத்தூர். கண்டமாணிக்கம் நெற்குப்பை.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/135
Appearance