உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விளைந்தாலும் அவற்றிற்கு விலை வைக்கும் உரிமை, விருது நகர் வணிகரின் தனி உரிமையாக இருந்து வருகிறது. பஞ்சு, பருத்தி உற்பத்தியைப் பற்றி இந்நூலின் பிறிதொரு பகுதியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக் கிறோம். இராஜபாளையம், விருதுநகர், சாத்தூர் நகர் கள் இவ்வகையில் ஏற்றம் பெற்றிருக்கின்றன.பஞ்சு பருத்தி விலைகளைப்பற்றி, நாளிதழாக ஓர் அறிக்கை இமமாவட்டத்தில் அச்சிடப்பெறுகிறது. மல்லியும் மிளகாயும் இம்மாவட்டத்திற்குரிய அடிப் தமிழ் நாடெங்கும் இவை படைப் பொருள்கள். விற்பனையாகின்றன. மணிலாக்கடலை உற்பத்தியில் தென் ஆர்க்காடு வட ஆர்க்காடு மாவட்டங்களுடன் ஒப்பிடக் கூடிய நிலை இராமநாதபுரத்திற்குச் சிறிதும் இல்லை. ஆயினும் மழை குறைவாயிருப்பதால், இதுவரை தரிசாகக் கிடந்த நிலங்களில் புன்செய்ப் பயிராக மணிலாக்கடலை பயிரிடப் பெற்று வருகிறது. சிங்கம்புணரியும் அருப்புக்கோட்டை யும் கடலை உடைக்கும் இயந்திரங்களைப் பெற்று, கடலை ஏற்றுமதியிலும் கடலை எண்ணெய், கடலைப் பிண்ணாக்கு கடலைப் பொட்டு வாணிபங்களிலும் செல்வம் கொழிக் கினறன. கைத்தறிகளில் நெய்த சேலை முதலியனவற்றுக்கு அருப்புக்கோட்டை, பரமக்குடி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆகிய பகுதிகள் குறிப்பிடத்தக்கன. தேவாங்கரும் சௌராஷ்டிரரும் தொன்றுதொட்டு, இத்தொழிலில் அனுபவம் பெற்றிருக்கினறனர். . செட்டிநாட்டுப் பாத்திரங்கள் உறுதிக்குப் பெயர் பெற்றவை. வெண்கலத்திலும், எவர்சில்வர் என வழங் Stainless Steel Steel யிலும் பாத்திரங்கள் செய்யும் தொழில் காரைக்குடியைச் சுற்றி வளர்ச்சிஅடைகிறது.