உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பெருமாள்புரத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ் நாடு அரசுக்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் இந்த ஆலையில் பங்கு உண்டு. தென்னிந்தியாவில் நூல் ஆலையை முதலில் நிறுவிய வர்கள் ஆங்கிலேயர். அவர்களுக்கு அடுத்தபடி இத் தொழில் ஈடுபட்டவர் தேவகோட்டை திவான்பகதூர் பி. எஸ் சோமசுந்தரம் செட்டியார். இவர் கள்ளிக் கோட்டையிலும் கோயமுத்தூரிலும் 19-ஆம் நூற் றாண்டில் ஆலைகளைத் தொடங்கினார். அந்நாள் தொட்டு நாட்டுக் கோட்டை நகரத்தார் பலர் தமிழ் நாட்டிலும் தென்னிந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஆலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலுள்ள ஆலைகளின் கிளைகளாக இவர்கள் இராமநாதபுர மாவட் டத்தில் சில ஆலைகளைத் தொடங்கியுள்ளனர். சிலா புதிதாக இத்தொழிலில் இறங்கி இராமநாதபுர மாவட் டத்திலேயே ஆலை நிறுவினர். மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஆலைகள் அமைக்க திரு. காமராஜ் அவர்கள் முதல் அமைச்சராகவும், திரு.வெங்கட்ராமன் அவர்கள் தொழில் அமைச்சராகவும் இருந்த பொழுது திட்டம் வகுக்கப்பட்டது. அந்நாளில் ஏற்பட்ட ஆலை களாவன; ஜவஹர் மில்ஸ், செட்டி நாடு. ருக்மணி மில்ஸ், சிலைமான். ஸ்ரீகற்பகாம்பாள்மில்ஸ், சோழபுரம். காளீசுவரர்மில்ஸ், காளையார் கோவில். சோமசுந்தரா மில்ஸ், முத்தநேந்தல். நித்திய கல்யாணி டெக்ஸ்டைல் மில்ஸ், சின்னக்கீரமங்கலம் (திருவாடானை). . அரசினர் மேற்கொண்ட திட்டப்படி இராமநாத புரம், பரமக்குடி வட்டங்களிலும் அருப்புக்கோட்டை வட்டத்து மல்லாங்கிணறு என்னும் ஊரிலும் நூல் ஆலை கள் தொடங்கப் பெற்றன.