144 கைத்தறி நெசவாளர்க்கு உதவ, கூட்டுறவுத் துறை யில் நூல் ஆலைகள் அமைக்கும் திட்டமும் காமராஜ் ட்சியில் உருவாகித் தமிழ் நாட்டில் பல மாவட்டங் களிலும் ஆலைகள் நிறுவப் பெற்றன. அவற்றுள் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்து ஆலைகளில் ஒரு சிலவற்றில் மட்டுமே விசைத்தறி உண்டு. அவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு. விதிவிலக்காக விருதுநகரில் உள்ள விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் நெசவு ஆலையாக மட்டுமே இருந்து வருகிறது. இதற்கு ஒரு இதற்கு ஒரு வரலாறு உண்டு. வரலாறு உண்டு. 1946இல் இந்த ஆலை தொடங்கப் பெற்றது. அப்போது சென்னை இராஜதானியின் முதலமைச்சராக ஆந்திர கேசரி டி. பிரகாசம் இருந்தார். நூல் நூற்பது ஏழை மக்களின் தனி உரிமை என்பதும் நூல் ஆலைகள் திறக்க அரசு சைவு வழங்கக் கூடாதென்பதும் அவர் கொள்கை, அதனால் நெசவு ஆலையாக மட்டுமே இந்த ஆலை அனு மதிக்கப் பெற்றது. தொழிலரசர் கருமுத்து தியாகராச செட்டியார் அவர்களுடைய ஆட்சியில் இந்த ஆலை பல வண்ணங்களில் கவர்ச்சியும் மென்மையும் உடைய பூப் போட்ட சேலைகளையும் துணிகளையும் உற்பத்தி செய் கிறது. நூல்களைச் சுற்றி வைக்கப் பயன்படும் Cone என்ற அட்டைக் குழாய்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்று விருதுநகரில் இருக்கிறது. வணிகப் பெருமக்களாகிய ஹார்வி குடும்பத்தாரால் மதுரை மில்லுக்காகத் தொடங்கப் பெற்ற இந்த நிறுவனம் பலவகை தனிச் சிறப்புக்களை உடையது. இந்தியாவில் இத்தகைய தொழிற்சாலை இது ஒன்றே. இதே முதலாளிகளுக்குச்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/146
Appearance