146 தொழில் தந்தை ஆர். வெங்கட்டராமன் ஏற்பாடு செய்தார். அவ்வாறு சுண்ணாம்புக் கற்களை அப்புறப் படுத்திவிட்டால் இராமேசுவரத் தீவின் அமைப்பு மாறி அதுவும் கடலாகி விடுமென்று புவியியல் அறிஞர் கூறி னர். அதனால் அத்திட்டம் கைவிடப் பெற்றது பிறகு, இராஜபாளையம் பகுதியில் ஆலங்குளம் என்ற ஊரில் அரசுத் துறையில் சிமெண்ட் ஆலை அமைப்பதென்றும் நாள் ஒன்றுக்கு 1200 டன் உற் பத்தி செய்வதென்றும் முடிவு செய்யப் பெற்றது. திரு. வெங்கட்டராமன் போட்ட இத்திட்டமே முழு நிறைவு பெற்று தமிழ் நாடு சிமெண்ட்ஸ்' என்ற பெயரில் ஏழுகோடி ரூபாய் மூலதனத்தில் ஏற்பட்டு 1970 முதல் சிமெண்ட் உற்பத்தியாகிறது. இந்த ஆலைக்காக 16 கி.மீ. தொலைவுக்கு இரயில் பாதை போடப் பெற்றிருக்கிறது. தமிழக அரசுக்குச் சொந்த மான தமிழ் நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்த ஆலையை நிறுவியுள்ளது. போர்ட்லண்டு கிரே சிமெண்ட் மட்டும் இப்போது செய்யப் பெற்று வருகிறது. சிமெண்ட் குழாய்கள் செய்யவும் திட்டமிடப் பெற்றி ருக்கிறது. தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கு: மாவட்டத்திலுள்ள எல்லா சேர்ந்து நூல் ஆலைகளிலும் மொத்தம் இரண்டு லட்சம் கதிர்கள்தான் உள்ளன என்றும், இது மதுரை ஹார்வி ஆலை அள வினதே என்றும் புதிய நூல் ஆலைகள் மாவட்டத்தில் நிறுவ அரசினர் இசைய வேண்டுமென்றும் மாவட்டத் திலுள்ள செல்வர்கள் விரும்பினர். குறிப்பிட்ட ஒரு தொழிலையே மேலும் விரிப்பது நல்லதல்ல என்றும், இயந்திரத் தொழில்கள் நிறுவவேண்டு மென்றும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/148
Appearance