உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 குள்ளேயே அமைக்கலாமென்றும் கருத்தரங்கு முடிவு செய்தது. கரும்பு ஆலை ஒன்று அமையலாமென்றும் சுருதப் பெற்றது. பத்துக் கோடி ரூபாய் மூலதனத்தில் ஜப்பானியர் உதவியுடன் சோடா ஆஷ் தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் வரையப் பெற்றது. கடற்கரை மிகுந்த இம்மாவட்டத்தில் இரசாயனத் தொழில்களுக்கு நிறைந்த வாய்ப்பு இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் மூலதனத்தில் The Bitterns Limited என்ற குழு, கருத்தரங்கின் விளைவாகப் பதிவு செய்யப் பெற்றது. கடல் நீரை இயந்திரங்களால் சுத்தப்படுத்தி உர உற்பத்திக்கு உதவும் இரசாயனப் பொருள்கள் சில வற்றை இத்தொழிற்சாலை செய்யும். இராமநாதபுரம் வட்டத்திலுள்ள ஆற்றங்கரை, அழகன் குளம், கழுகு ஊரணிப் பகுதியில் இத்தொழிற்சாலை அமைகிறது. முதுகுளத்தூர் வட்டத்திலும் கீழக்கரையிலும் உள்ள ஜிப்சத்தை சிமெண்ட் செய்வதற்கும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் செய்வதற்கும் உபயோகிக்கலாமென்றும் கருத்தரங்கில் முடிவு செய்யப் பெற்றது. வைகை, உப்பாறு ஆகிய ஆறுகள் கடலுடன் கலக்கும் இடங்களில் இரும்புத்தாது இருப்பதைத் தக்க வாறு பயன்படுத்த வாய்ப்பு உண்டு தொண்டியில் படகுகள் கட்டுவது, இளையாங் குடியில் பாய் நெசவு ஆ ஆகிய சிறு தொழில்களுக்கு அரசினர் ஊக்கம் அளிக்க வேண்டுமென்றும் கருத் தரங்கு அறிக்கையில் குறிப்பிடப் பெற்றது, புதுவயலில் இயங்கி வந்த Photographic sensitive paper செய்யும்