157 மும் மாநில அரசிடமிருந்து இருபத்தைந்து சதம் வரை யும் வட்டியில்லாக் கடனும் கிடைக்கும். திருப்பத்தூர் அருகே ரப்பர் டயர் தொழிற் சாலை தொடங்க ஏற்பாடு நடை பெற்று வருகிறது. மலேசியா விலிருந்து ரப்பர் வரவழைத்து, அமெரிக்கத் தொழில் நுட்ப உதவியுடன் கார், ஸ்கூட்டர், சைக்கிள் ஆகிய வற்றுக்கு வேண்டும் டயர்களைச் செய்வது இத் தொழிற் சாலையின் குறிக்கோள் என்று கூறுகின்றனர் சிங்கம் புணரிக்கு அருகே ஆனைக்கரைப் பட்டியில் சென்னை என்பீல்டு இந்தியா லிமிடெட் ஒரு கிளை தொடங்கவிருக்கிறது என்றும் 90 லட்சம் மூலதனத்தில் கிளை அமையும். 1973-முதல் இங்கு மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொடங்கும் என்றும் சொல்லுகிறார்கள். மின்சார வசதி: 900-ஆம் ஆண்டிலேயே இம்மாவட்டத்தில் செல்வர் சிலர், வீட்டு உபயோகத்திற்குச் சிறிய மின்சார இயந்திரங்கள் மூலம் மின்விளக்குப் போட்டுக் கொண் டனர். இம்மாவட்டத்தில் தனியார் துறையில் மின்சாரக் கம்பெனிகள் தொடங்கப் பெற்றன. கானாடுகாத்தான் மின்சாரக் கழகம், தென்னிந்தியாவில் உண்டான மின் வழங்கும் நிலையங்களுள் பழமையானது. பல ஊர்களில் சவுத் மதராஸ் எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேசனின் உடன்பாட்டுடன் தனி நிறுவனங்கள் ஏற்பட்டன. அந்தக் கார்ப்பரேசன் உருவாவதற்கும் வளருவதற்கும் இம்மாவட்டத்தார் பலர் பெரிதும் காரணம் ஆவர். தமிழ் நாட்டில் அரசு உடைமையாக்கப் பெற்ற முதல் மின்சாரக் கழகம் நெற்குப்பை எலக்ட்ரிக் சப்ளை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/159
Appearance