158 கம்பெனி. தமிழக அரசு மின்சார நிறுவனங்களைத் தேசிய மயமாக்கிய பிறகு சிற்றூர்களுக்கும் உழவர் களுக்குப் பம்புசெட் வைத்துக் கொள்ளவும் மின்வசதி செய்து வருகிறது. தனியார் துறையில், இராமேசுவரம் தீவில் ஆயில் இஞ்சின்கள் மூலம் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்கப் பெற்றது. அரசினர் மின் வினியோகத்தை மேற்கொண்ட பிறகு, கடலினுள் கம்பிகள் போட்டு, 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப் பெறுகிறது. வங்கித் தொழில் தென்னிந்தியாவில் வங்கித் தொழில் வளர்ச்சியில் இந்த மாவட்டத்தின் பங்கு பொன் எழுத்துக்களில் பொறிக்கத்தக்கது. ரிசர்வு பேங்கு, ஸ்டேட் பேங்கு ஆகியவை தொடங்கிய காலம் முதல் இம்மாவட்டத் தார் ஒரு சிலர் இவற்றில் இயக்குநராகப் பணி புரிந்துள் ளனர். இன்றைய ஸ்டேட் பேங்கின் முன்னோடியான இம்பீரியல் பேங் ஆப் இந்தியா, அதற்கு முற்பட்ட பிரசிடென்சி பேங் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் செட்டியார்களின் பங்கு பெரிது, கணிசமானது, முக்கிய மானது. இந்தியாவில் வங்கித் தொழில் வளர்ச்சி பற்றிய ஆய்வு நூல்கள், அரசாங்க அறிக்கைகள் ஆகிய வற்றிலிருந்து இதை உணரலாம். . இந்தியன் பேங், இந்தியன் ஓவர்சீஸ் பேங் பேங் ஆப்மதுரை என்பன இம்மாவட்டத்தாரால் தொடங்கப் பெற்றவை. இவை தவிர இந்தியாவிலும் வெளிநாடு களிலும் இவர்கள் ஆரம்பித்த பல பேங்குகளும், நூல் ஆலைகளும், இரும்பு ஆலைகளும், சிமிண்டு ஆலைகளும் திரைப்பட ஸ்டுடியோக்களும், ஆயுள் இன்சூரன்சு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/160
Appearance