159 நெருப்பு இன்சூரன்சு நிறுவனங்களும் தேயிலை, ரப்பர்த் தோட்டங்களும் நூற்றுக் கணக்கின. எக்ஸ்சேஞ்சு பேங்காகச் செயற்பட்ட உண்டியல் கடைகள் 1941 வரை இம்மாவட்டத்தில் இயங்கி வந்தன. நெடுங்கலாமகவே திருப்பத்தூர் வட்டத்தில், பேங் கிளைகள் ஏராளமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றன. பிறகு 1906 - இல் சென்னை நகரில் அர்பத் நாட் பாங்கு முறிந்தது. பணம் போட்டவர்கள் போட்டிருந்த பணத்தை இழந்தனர். அதன் நகரத்தார் களின் முயற்சியால், இந்தியன் பேங்கு 1907-இல் ஏற்பட்டது. தென்னிந்திய மக்களுக்கு பேங்குத் தொழிலில் நம்பிக்கை உண்டானதற்கு, நகரத்தார்கள் அதில் முன்னணியில் இருந்ததே காரணம். வணிகக் கழகங்கள் சென்னையிலுள்ள சதான் இந்தியா சேம்பர் ஆப் காமர்சின் வளர்ச்சியில் நகரத்தார் பங்கு பெரிது. அனைத் திந்திய வணிகர் பெரு மன்றத்தின் தலைவர்களாக (President, Federation of Chambers of Commerce and Industry) ராஜா சர் முத்தைய செட்டியார், தொழில் மேதை அ. மு. மு. முருகப்ப செட்டியார் ஆகியோர் இருந்திருக்கின்றனர். தொழிலாளர் இயக்கம்: INTUC என்னும் இந்திய தேசிய டிரேட் யூனியன் காங்கிரசின் - கிளை 1950 இல் இராஜபாளையத் தில் ஏற்பட்டுப் பஞ்சாலைத் தொழிலாளர்க்குப் பணி பரிந்துவருகிறது. ஸ்ரீ வில்லிபுத்தூர் சங்கரன் கேவிால் வட்டங்களில் தேசியப் பஞ்சாலைத் தொழிலாளர் இச்சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கத்தின் பதிவு எண் 1655-இராஜபாளையம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/161
Appearance