உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 அரசினரிடமிருந்து ஐ சி.எஸ். அதிகாரிகளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டனர். பொதுவாக ஜமீன்கள் நன்கு நடத்தப்பெற்றன. ஆனால், ஜமீன்தார்களின் பெயரை வைத்து ஆங்காங்கு சில சிறு கூட்டங்கள் பெருஞ் செல்வாக்குப் பெற்றன. இராமநாதபுரம் ஜமீனில் வரி வசூலில் எந்தவிதமான கண்டிப்பும் காட்டப்படவில்லை. ஜமீன் ஒழிப்பு : சுதந்திர இந்தியாவில் ஜமீன்கள் ஒழிக்கப்பட்டன. 1949- ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் ஜமீன் ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. முதல் கட்டமாக அந்த ஆண்டில் இராமநாதபுரம், சிவகங்கை உள்பட சில ஜமீன்கள் அரசினரால் ஒப்புக் கொள்ளப்பட்டன. பின்னர் மேஜர் இனாம்களும் அரசு வசமாயின இப்போது மாவட்டம் எங்கும், ரயத்துவாரி முறையே பெரும்பாலும் இருந்து வருகிறது. அரசியல் கட்சிகள்; இம்மாவட்டத்தில் அரசியல் உணர்ச்சி எப்போதுமே மிகுதியாக இருந்து வந்திருக்கிறது. கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையால் தூத்துக்குடிப் பகுதியிலும் அதை அடுத்த சாத்தூர் வட்டத்திலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் புரட்சிக் கனல் தெறித்தது. அதில் உருவானவரே தலைவர் காமராஜ். . ஜஸ்டிஸ் அதே நாட்களில் நகரங்களில் ஜஸ்டிஸ் கட்சி மிக வலுவாக இருந்தது. விருதுநகர்தான் கட்சியின் தாயகம். நாடார்கள் கோவில்களுக்குள் செல்வதற்குப் பல தடவைகள் இருந்த காரணத்தால், பிராமண எதிர்ப்பு இயக்கமாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சி யில் அவர்கள் பெரும் பங்கு கொண்டார்கள். விருது