162 இருந்து வந்தது. ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் இராமநாதபுர மாவட்டத்துக்குள்ளேயே அலுவலகத்தை வைப்பதற்கு, எல்லாப் பகுதி மக்களும் உடன்படவில்லை. அனால் இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தனிக் கட்டிடம் மதுரையிலேயே கட்ட தமிழக அரசு 1960-இல் முடிவு செய்தது. இக்கட்டி டம் 1963-ஆம் ஆண்டு மார்ச்சு 28-ஆம் நாளில் திறந்து வைக்கப் பெற்றது. ஜமீன்கள்: . பல ஜமீன்கள் இருந்த போதிலும் இராமநாத புரமும் சிவகங்கையும் தான் முக்கியமானவை. அவற்றின் வரலாறே இம்மாவட்டத்தின் வரலாறு ஆகும். இராமநாதபுரம் ஜமீனில் வாரப் பத்து முறை நிலவியது. உழவர்கள் வேளாண்மையில் கிடைத்த வருவாயில் பாதியை தாங்கள் வைத்துக்கொண்டு மற்றொரு பாதியை நில உடைமையாளருக்குக் கொடுத்து வந்தனர். இது தவிர நில உடைமையாளருக்கு கங்காணம், மகமை முதலியனவும் கொடுக்கப்பெற்றன. சிவகங்கை ஜமீனிலும் ஏறத்தாழ இதே நிலை நிலவியது. ஜமீன்தார்கள், நில வரியை நெல்லாகவோ,ரொக்க மாகவோ பெற்றுக் கொண்டார்கள். நன்செய்க்கு ஏக்கருக்கு இருபது ரூபாய் வரையும் புன்செய்க்கு நான்கு ரூபாய் வரையும் வரி விதித்தனர். தானியமாக வரி செலுத்த விரும்பிய உழவர்கள், நெல் பயிரிட்டால் கண்ட முதலில் பாதியையும் புன் செய்த் தானியங்கள் பயிரிட்டால் அதில் மூன்றில் ஒரு பகுதியையும் ஜமீனுக்குக் கொடுத்தனர். வரி வசூலைத் திறமையாகச் செய்வதற்கும் ஜமீனை நிர்வகிக்கவும். இந்த ஜமீன்கள் பிரிட்டிஷ் இந்திய
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/164
Appearance