உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாறு: 9. ஆட்சி முறை 1910-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி இராமநாதபுர மாவட்டம் புதிதாக உருவாக்கப் பெற் றது. இராமநாதபுரம், சிவகங்கை என்ற இரு ஜமீன் பகுதிகளும் ஏற்கெனவே மதுரை மாவட்டத்தில் இருந் தன. அவற்றை ஏழு வட்டங்களாகப் பிரித்து ஆங்கி லேயர் ஆட்சி செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் பரப்பிலும் அளவிலும் பெரிய மாவட்டமாக இருந்ததால் அதன் வடகோடியி லுள்ள சாத்தூர், ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டங்கள் அந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கப் பெற்று இராமநாதபுர மாவட்டம் உருவானபோது அவை அந்த மாவட்டத் துடன் சேர்க்கப் பெற்றன. இந்த இணைப்பு செயற்கையாக ஏற்பட்டது. வரலாற்று அடிப்படை கிடையாது. நெல்லை மாவட்டத் திலிருந்து பிரிக்கப் பெற்ற பகுதியினர் தங்கள் பகுதி யிலேயே தலைநகர் அமைய வேண்டுமென்று இன்றும் விரும்பி வருகின்றனர். இதைப்பற்றி இக்கட்டுரையின் பின் பகுதியில் தலைநகர்ப் பிரச்சினை என்ற தலைப்பில் கூறுவோம். இராமநாதபுர மாவட்டம் உருவாக்கப் பெற்ற போது, ஏழு வட்டங்கள் ஏற்கெனவே மதுரை மாவட்டத்தில் இருந்த காரணத்தால் தொடர்ந்து மதுரையிலேயே அலுவலகங்கள் இருந்தன. மதுரை கலெக்டரின் அலுவலகக் கட்டிடத்தில் ஒரு பகுதியில் இராமநாதபுர மாவட்டக் கலெக்டரின் அலுவலகம்