உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 துரையைக் கையால் ஒருபக்கம் தள்ளிவிட்டு அம் மாளிகையிலிருந்து, ஊமைத்துரை பின்தொடர, வெளிப் பட்டார். உதவித் தளபதி சில படைவீரர்களுடன் வந்து வழிமறிக்க, அவனையும் கட்டபொம்மு வெட்டித் தள்ளிவிட்டார். கும்பினிப்படை வீரரைக் கட்டபொம்மு வின் வாள்களும் வேல்களும் வென்றுவிட்டன, வ. உ. சி : கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், சுதேசி ஸ்டீம்ஷிப் நாவிகேஷன் கம்பெனியைப் பதிவு செய்த போது, பாண்டித்துரைத் தேவர் ஒரு லட்சம் ரூபாய்க் குப் பங்குப் பணம் செலுத்தி அவருடைய முயற்சியை ஆதரித்தார். நகரத்தார்களில் இலங்கைத் தொடர்பு டைய ஒரு சிலர் ஓரளவு பங்கெடுத்துக் கொண்டனர். பூ.ச. குமாரசாமி ராஜா: அரசியல் விழிச்சியை இந்த நூற்றாண்டில் இம் மாவட்டத்தில் பரப்பிய முதல்வர் குமாரசாமி ராஜா. அன்னை பெசண்டு அம்மையார் ஹோம்ரூல் இயக்கத்தை தொடங்கியபோது, குமாரசாமி ராஜா அதற்கு உறு துணையாக இருந்தார். அவர் 1916-இல் இராஜபாளையத் தில் தொடங்கிய மீனாட்சி சகாய விவேக வித்யானந்த சங்கம், ஹோம்ரூல் இயக்கத்தை ஆதரிப்பதை அதன் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. குமாரசாமி ராஜாவுக்கு அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தாலும் செல் வாக்காலும் 1920, 1927, 1934 ஆம் ஆண்டுகளில் மகாத்மாகாந்தி இராஜபாளையத்துக்கு வருகை புரிந் தார். தொடர்ந்து, அனைத்திந்தியப் புகழ்பெற்ற தேசி யத் தலைவர்கள் பலரும் இராஜபாளையத்துக்கு வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் தேசியக் கோட்டையாயிற்று,