உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அந்நாளில் இம்மாவட்டத்துக்கு கலெக்டர்களும் உயர் போலீசு அதிகாரிகளும் பொறுப் பேற்கும்போது, "இராஜபாளையம் தேசிய சக்திகள் நிறைந்த ஊர்; எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்று சென்னை யிலுள்ள உயர் அலுவலர்கள் பாடம் சொல்லிக் கொடுத் துப் பிறகுதான் அவர்களை இந்த மாவட்டத்துக்கு அனுப்புவார்களாம். காங்கிரஸ் இயக்கம் இந்தியாவில் ஏற்பட்டதன் பொன்விழா 1934-இல் கொண்டாடப் பெற்றது. அதன் நினைவாக இராஜபாளையத்தில் தலைவர் இராஜேந்திரப் பிரசாத், ஒரு மைதானத்தைத் திறந்து வைத்தார். . காந்திய இயக்கம் என்றும் மக்கள் நினைவில் இருக்க வேண்டுமென்பதற்காகவும் காந்தியத் தத்துவங்களைப் பரப்ப வேண்டுமென்பதற்காகவும் குமாரசாமி ராஜா தாம் வாழ்ந்த வீட்டையே பொது மக்களுக்கு வழங்கி அதில் காந்தி கலைமன்றத்தை 1965-இல் நிறுவினார். அதுவே தம் வாழ்நாளில் பெருமிதம் அடைந்த நாள் என்றும் அவர் கூறினார். மகாத்மாகாந்தியும் ஜவஹர் லால் நேருவும் இராஜேந்திரப் பிரசாத்தும், குமாரசாமி ராஜாவின் விருந்தினராகத் தங்கிய இடமாதலால் இந்த இடம் புனிதம் பெற்றுள்ளது. . காந்தி கலைமன்றத்தில் பாஞ்சாலங் குறிச்சியி லிருந்து கொண்டு வரப் பெற்ற, கட்டமொம்மனின் சிலை காட்சியில் வைக்கப் பெற்றிருக்கிறது. விருதுநகர்ப் பகுதி: சாத்தூர் வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த காலத்திலிருந்தே உணர்ச்சியைப் பெற்றது. ளைஞராக தேசிய இருந்த