179 "சிவா சில தொண்டர்களுடனேயே காரைக்குடி வந்தார். வந்ததும் பாரதமாதா ஆச்ரமம் தோன்றி விட்டது. மேலை ஊரணிக்கும் கல்லுக்கட்டிக்கும் இடையேயுள்ள முனீர்வான் கோவில் தொவில் அந்த ஆச்ரமம் இடங்கொண்டது, எல்லாப் பணி களையும் ஆச்ரமவாசிகளே செய்வர். அவர்களுள் இன்று என் நினைவில் இருப்பவர்கள் திருவாளர்க ளான ஸ்ரீநிவாச வரதன், தியாகராஜ சிவம்,கல்கி சதாசிவம் ஆ கிய மூவருமே. தேசிய பஜனைகளும் நிகழ்ந்தன." இந்து மதாபிமான சங்கம்: தேசியத்தைப் பரப்பியதில் காரைக்குடியில் 1917- ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இந்து மதாபிமான சங்கத்துக்கும் தொடர்பு உண்டு. பாரதியாரின் பாடல் பெற்ற இச்சங்கம் குமரன் ஆசிரியராக இருந்த சொ. முருகப்பா, தமிழ்க்கடல் ராயசொ ஆகியோரால் வளர்ந்து தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றிருக் கிறது. வேதாந்தமும் தேசத்தொண்டும் ஒன்று என்று கருதிய தேசபக்தர்களை இச்சங்கம் வரவேற்று ஊக்குவித் திருக்கிறது. நகரத்தார்கள்: தேசிய இயக்கத்தில் 1920க்குப் பிறகு நகரத்தார் களில் படித்த சிலர் ஈடுபடலாயினர். வணிகத்துறையில் மட்டும் கவனம் செலுத்தி ஆங்கில அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் இதை விரும்பவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனி ஏற்படுமுன் செட்டிநாட்டில் குடிசை வீடுகளே இருந்தன என்றும் ஆங்கில ஆட்சியில் தான் நகரத்தார்கள் ஈட்டினா என்றும் சுட்டிக்காட்டி தேசிய இயக்கத்தை எதிர்த்தனர். செல்வம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/181
Appearance