180 "இங்கிலீஷ் கொடி பறக்கவே இளையாத்தக்குடி கிறங்கவே" என்ற பாடுவார் முத்தப்பர் பாடலையும் சான்று கூறினர். . எனினும் நகரத்தார் இளைஞர் இதனைப் பொருட் படுத்தவில்லை. அமராவதிபுதூர் பிச்சப்பா சுப்பிர மணியம், சொ.முருகப்பா, ராயசொ,சா. கணேசன் ஆறு. ஆ. ராம். சொக்கலிங்கம் செட்டியார் ஆகிய பெருமக்கள் தேசிய இயக்கத்துக்கு வித்திட்டனர். சாதி வேறுபாடின்றிப் பலரும் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு, ஒன்றாக உழைத்தனர். பொ. திரிகூட சுந்தரனார், அமராவதி புதூர் என். பரமசிவம். அமராவதி புதூர் நாராயண ஐயங்கர்,திருப்பத்தூர் கிட்டுவையர், காரைக்குடி என் எஸ். கணபதி, டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோரும் குறிப்பிடத்தக்க எஸ். வர்கள். . காரைக்குடி மாவட்டம் காரைக்குடிப் பகுதியில் காங்கிரசுக்கு மிகுதியான ஆதரவு இருந்ததால் திருப்பத்தூர், திருவாடானைக் சிவகங்கை வட்டங்கள் அடங்கிய ஒரு தனி மாவட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் அமைக்கப் பெற்றது. இது காரைக்குடி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி என்ற பெயரில் 1943 வரை இருந்தது. தமிழ் நாட்டில் அதிகமான காங்கிரஸ் றுப்பினர்களைச் சேர்த்து அதற்குரிய கேடயத்தையும் இந்த மாவட்டம் பெற்றது. 1927-இல் காந்தியடிகள் காரைக்குடியில் நகரத்தார் களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கதர் விற்பனையில், காரைக்குடி தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/182
Appearance