பிற்பட்ட 190 சாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஏளனம் செய்கிறாயா? என்று அரசர் புலவரைக் கடிந்த தும்,கடிகை முத்துப் புலவர் தம் சொற்களுக்கு இனிய விளக்கம் கூறி அவரை மகிழ்வித்ததும் இலக்கிய நயத் துக்குச் சான்றாக நிலவி வருகின்றன. - கள்ளா - தேன் போன்ற சொற்களை உடையவனே; அகம்படியா - செருக்குப் படியாதவனே; காராளன்- யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வாறு கொடுப்பவன் ஆதலின் "கார்" ஆகிய மேகத் தையும் ஆள்பவன்; கம் ஆளன் - தலையுடன் கூடியவர் களாகிய மக்களை ஆள்பவன்; வள்ள- வள்ளலே; ஒட்டா தொட்டிய- சேராதவனையும் சேர்த்து வைத்து ஆட்சி செய்யும் ஆற்றல் படைத்தோய்; வாணியா- அறிவில், நீ, சரசுவதியையும் மிஞ்சியவன் என்று சொல்லலாமா?; உள்ளன் புலையன் - உள் அன்பு உளையா தவனே; நாமதாதா - மிகு புகழுடன் கூடிய கொடை யாளியே; புன்கவடுகா - (புல் கவடுகா) அற்பமாகிய வஞ்சகத்தை உள்ளத்தில் அடக்கிவிடும் வன்மை நிறைந் தோய் ஆகிய கௌரி வல்லப அரசே என்று புலவர் ஏற்ற முறச் சொன்னதும் அரசர் உச்சி குளிர்ந்து உள்ளம் பூரித்து உவகையோடு பரிசில்களை வாரி வழங் கிப் புலவரை வழியனுப்பி வைத்தது வரலாறும் இலக் கியமும் வழங்கி வரும் செய்தி. சேற்றூர்க் குறுநில மன்னர்: சுந்தரராச பாண்டியன் என்ற சேற்றூர் மன்னர் தமிழார்வம் மிக்கவராகத் திகழ்ந்திருந்தார். தானே கவியெழுதும் வல்லமையும் இவருக்கு உண்டு. இராம சாமிக் கவிராயரும் முகவூர் கந்தசாமிக் கவிராயரும் இவரது அவையில் பல காலம் வாழ்ந்து தமிழை வளர்த் தனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/192
Appearance