உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 சீதக்காதி வள்ளல்: ஷெய்கு அப்துல் காதர் மரக்காயர் என்பது இவரது பெயர். இவர் பெயரை உச்சரிக்கை இயலாமலே சீதக் காதி வள்ளல் என்று குறிக்கலாயினர். இவர் கிழவன் சேதுபதியின் அமைச்சராக இருந்தார் என்பர். தமிழ்ப் புலவர் பலரை ஆதரித்த இவ்வள்ளலின் நினைவாகச் சென்னைத் துறைமுகப் பகுதி சீதக்காதி நகர் என வழங்கி வருகிறது. செட்டி நாட்டு வள்ளல்கள்: ஆண்டிப்பட்டி குறுநில மன்னரான மு. சித. பெத் தாச்சி செட்டியார், முறையூர் பழ.சி.சண்முகம் செட்டி யார், தமிழ் வள்ளல் தேவகோட்டை சேவு.மெ. மெய் யப்ப செட்டியார் ஆகிய பலர், தமிழ்ச் சங்கங்களையும் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்துள்ளனர். "செட்டி நாடும் தமிழும்" என்னும் நூலில் விவரம் காண்க. தமிழ்ப் பல்கலைக் கழகமாகிய, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஏராளமான தமிழ்ப்புலவர்களை ஆதரித்தும்; பலவழிகளில் தமிழுக்கு ஏற்றம் தந்தும், தமிழ் இசை இயக்கத்தைத் தொடங்கிப் பெரும் எதிர்ப்புக்கிடையே அதை நிலைநாட்டியும் தமிழ் வரலாற்றிலும் தமிழர் வர லாற்றிலும் பெருவள்ளல் எனப் பெயர் பெற்றுள்ளார். டாக்டர் அழகப்பச் செட்டியார் திருவாங்கூர்ப் பல்கலைகழகத்தில் தமிழுக்குப் பேராசிரியக் கட்டில் ஏற் படுத்தியும், தமிழில் கலைக் களஞ்சியம் வெளிவர முதல் நன்கொடை வழங்கியும் தமிழ் வளர்த்த வள்ளல்களுள் இடம் பெற்றிருக்கிறார். கலைத்தந்தை கருமுத்து தியாராசச் செட்டியார் மதுரையில் தமிழுக்கு ஏற்றம் தரும் தியாகராசக்