உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 மூட்டுதல் - பொறுத்துதல் - தைத்தல். பரி - மீன்பிடிக்கும் கருவி. ஈர்க்குகளால் கட்டப்பெறுவது; வாய் அகன்றும் அடிமூட்டப்பெற்றும் உள்ளது தூரி போன்று மீன்பிடிப்பது. ஊத்தா : தூரிபோன்ற அமைப்புடையது. பின்புறம் திறவையாக உள்ளது. பாச்ச வலை - மீன் பாய்ந்து சென்று வலையில் மாட்டிக் கொள்வதால் பாய்ச்சல் வலை என்று பெயர் பெற்றுப் பின் பாச்சவலை என மருவியிருக் கிறது. சன்னக் கெண்டைவலை-சன்னமான சிறு மீன்கள் பிடிக் கும் வலை; இரண்டும் ஒரே அமைப்பின. பிசினாரி - கஞ்சன்; விடாக் கண்டன், சின்னாங்கு, சல்லிசு - சவுகரியம். மணிக்கூடு - நாழிகை வட்டில் (ஈழ வழக்கு) மணிக்கட்டை - வலை மிதப்பதற்காக மேலே கட்டப்படும் மரக்கட்டைத் துண்டுகள்; பெரும்பாலும் எருக் கிலைத்தண்டு கோக்கப்படும். மணிக்கால் - வலையின் அடிப்பகுதி நீரில் அமுங்குவதற் காகக் கேர்க்கப்படும் சுடப்பட்ட மண் உருண் டைகள். சரடு - கொடி, நூல் (தாலிச்சரடு). கருகமணி - கரிசமணி - மணமாகாப் பெண்டிர் கழுத்தில் அணியும் மணிக் கோவை. ஒண்ணப்பூ - காதின் மேற்பகுதியில் (S வடிவத்தில்) அணியப் பெறும் அணி.(ஒள் நற்பூ). பூடி- காதின் மேற்புறத்தில் (குச்சிபோன்ற வடிவம்) அணியப்பெறும் அணி,