உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தோடு, தடுப்பு - காதின் அடிப்புறம் அணியப்பெறும் கடுக்கன் - ஆண்களது வட்டமான காதணி. அணி. மாராயம் - பெண் பூப்பெய்தியதை அறிவிக்கும் மங்கலச் செய்தி. பாக்கு மாற்றுதல் - பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமண ஒப்புதலுக்கு அறிகுறி யாக வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்ளும் சடங்கு (நிச்சய தாம்பூலம்] (நாள்வைத்தல்) கெட்டி மேளம் - இடைவிடாமல் தட்டப்பெறும் மேளம் வீடு அறிதல் - மணமானபின் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் பெண் வீட்டிற்கும், பெண்வீட் டார் மாப்பிள்ளை வீட்டிற்கும் வந்து வீட்டை அறிந்து கொள்ளல். - கேதம் - இழவுச் செய்தி. சடனை, சல்லை - துன்பம்; தொல்லை. ஆக்கினை - சின்னா பின்னம் செய்தல்; தண்டனை. முண்டு - மரக்கட்டை. சினுக்குதல் - புனைதல்; சீப்பட - சீரழிய. - உடையடித்தல், காயடித்தல் - ஆடுமாடுகளுக்குள்ள விந்துப் பையைச் சிதைத்தல். பினாத்துதல் - பிதற்றுதல். கடுப்பு 1 கவை போன்றது, உடையடித்தலுக்குப் பயன் படும்; பாளையை நசுக்கிப் பதநீர் இறக்க உதவும். கடுப்பு -எரிச்சல்,