209 கூட்டிக் கொண்டுவா என்று நெல்லை முதலிய மாவட்டங்களில் சொல்லுவதை, இங்கு 'கூட்டிவா என்று சுருங்கக் கூறுவர். உடைமை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள, உங்களுக்கு எத்தனை ஏக்கர் இருக்கிறது என்று மதுரை மாவட்டத்திலும், எத்தனை வேலி உண்டு என்று தஞ்சை மாவட்டத்திலும், எத்தனை கோட்டை விதைப்பாடு இருக்கிறது என்று நெல்லை மாவட்டத்திலும் கேட்பர். எத்தனா நடவு இருக்கிறது என்று இராமநாதபுர மாவட்டத்தில் கேட்பர். இது எத்தனை ஆள் நடவு என்பதன் சிதைவு. ஓர் ஆள் நடக்கூடியது 15 சென்ட் நிலம். விருதுநகர்ப் பகுதியில் வழங்கும் தமிழ், பெரும் பாலும், நெல்லை மாவட்டத் தமிழே. அங்கு சுண்ணாம்புக் காளவாய் என்பதைச் சுண் ணாம்புக்காளவாசல் என்றும் செங்கல் சூளை என்பதை செங்கல்மால் என்றும் கூறுவர். " கடற்கரைப் பட்டினமாகிய தொண்டியில் பேச்சுத் கமழும். பழந்தமிழ்ச் தமிழில் யாழ்ப்பாண மணம் சொற்களும் விரவியிருக்கும். சான்று; 'என்ன தோழமை வாங்கிலே இரிங்கி வாங்கிலே' என்பது நீண்ட நாற் காலிப் பலகையைக் குறிக்கும். பெட்டகத்தைப் பொட்டுவம் என்பர். பிற சிறப்புக்கள்: தாலாட்டும் ஒப்பாரியும் நாட்டுப் பாடல்களும் இம்மாவட்டத்துக்கு வருபவர்களின் மனத்தை ஈர்ப்பன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/211
Appearance