உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2is யும்,பல தொடக்கப் பள்ளைகளையும் நிறுவி திறம்பட நடத்தி வருகின்றனர். விருதுநகர் ஹாஜி சையத் முகம்மது அவர்கள் ஒரு இலவச உயர்நிலைப்பள்ளியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேலும் விருதுநகரிலுள்ள இந்துக்களும், கிருஸ்தவர் களும், முகமதியர்களும் மற்றும் தனிப்பட்டோரும் பல கல்வி நிலையங்களை நிறுவி,சாதி மத வேறுபாடின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதியளித்து வரு கிறார்கள். சிவகாசி, சாத்தூர் போன்ற ஏனைய நகர்களிலும் தங்கள் சமூகத்தார் வாழும் ஒவ்வொரு சிற்றூரிலும் நாடார்கள் உயர்நிலைப் பள்ளிகளை அமைத்துக் கொண் டிருக்கிறார்கள். இராஜபாளையத்தில் ராஜாக்களும் அருப்புக் கோட்டையில் தேவாங்கர்களும் நல்ல உயர் நிலைப்பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். சில ஊர்களில் செல்வர்களுக்குள் போட்டி ஏற்பட்டு தேவைக்கு மேற் பட்ட உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. நகராண்மைக் கழகங்களும் பல உயர்நிலைப் பள்ளி களை நடத்தி வருகின்றன. அரசினர் உயர்நிலைப் பள்ளிகள் சிலவும், மாவட்டக் கழகத்தார் தொடங்கி இப்போது அரசு ஏற்றுக் கொண்டிருக்கும் பள்ளிகளும் உள்ளன. இவை அனைத்தையும் ஒரே அமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது இன்றியமையாதது. கல்லூரிகள் 1947 வரை இம்மாவட்டத்தில் ஒரு கல்லூரியும் ஏற்படவில்லை. அக்குறையை அந்த ஆண்டில் வள்ளல் அழகப்பர் போக்கினார்.