உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 அழகப்பா கல்லூரி அழகப்பாபுரம், காரைக்குடி-3. 3-7-1947இல் அடையாற்றில் பெசண்டு அம்மையார் நூற்றாண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஆ.இலட்சுமண சாமி முதலியார் 'புதிய கல்லூரிகள் நிறுவப் பலர் முன்வர வேண்டும்' என்று ஆர்வத்தோடு வேண்டுகோள் விடுத்தார். உடனே டாக்டர் அழகப்பா எழுந்திருந்து 'இராமநாதபுர மாவட்டத்தில் ஒரு கல்லூரி நிறுவு வேன்' என்று உரைத்தார். ஒரு திங்களுக்குள் 11-8-1947-இல் காரைக்குடியில் காந்தி மாளிகையில் கல்லூரி தோன்றிற்று. ஓராயிரம் ஏக்கர் பரப்புள்ள காடுகள் வாங்கப் பெற்றன. அழகப்பர் அவற்றைக் காடழித்து நாடாக் கியதை, நரியிசைத்த காடு நகராய்ச் சிலம்பின் வரியிசைக்கப் பள்ளி வகுத்தான்;-உரியசைத்துப் பாம்பா டிடமெல்லாம் பந்தா டிடமாகும் தாம்பாடு கன்னியர்க்குத் தாம்."* என்ற பாடலால் அறியலாம். அதைத் தொடர்ந்து காரைக்குடி இரயில் பாதைக்கு அருகாமையில் கட்டிடங்கள் அணியணியாக எழுந்தன. உமையாள் விடுதி, வீரப்ப அம்மான் விடுதி, விசாலாட்சி விடுதி ஆகியவையும் கட்டப் பெற்றன. . கட்டிடங்கள் விரைந்து உருவானதைப் பின்கண்ட பாடலால் உணர்க: DB வெள்ளி விடியுமுன் வீறுசால் கட்டிடங்கள் உள்ளும் உயரம் உயர்த்துவான் - நள்ளிரவும் -