221 மாவட்டத்தில் இல்லையென்பதும், இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பெருநகர்களில் கல்லூரிகள் இல்லையென்பதும் கூர்ந்து கவனிக்கத் தக்கன. மகளிர் கல்லூரிகள் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி, பள்ளத்தூர் . நெடுங்காலமாக இவ்வூரில் உயர்நிலைப்பள்ளி நடத்திவரும் உ.அ.பெரி. மு. அருணாசலம் செட்டியார் கொடைவளத்தால் இக்கல்லூரி 1962-இல் ஏற்பட்டது. புகுமுக வகுப்பு: பி .ஏ ; பி. எஸ்சி; வகுப்புக்கள் நடைபெறுகின்றன. ஏறத்தாழ 1,000 மாணவிகள் கல்வி கற்கின்றனர். சிறந்த கட்டிடங்கள் கட்டப் பெற்றுள்ளன. வி.வி.வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர் விருதுநகர் ஹிந்து நாடார்கள் பரிபாலன சபை 1962-இல் இக்கல்லூரியை நிறுவியது. மதுரைச் சாலையில் கவினுறு கட்டிடங்கள் கட்டப் பெற்றிருக் கின்றன. புகுமுக வகுப்பு ; பி.ஏ.,பி.எஸ்சி. வகுப்புக்களில் ஓராயிரம் மாணவிகள் உள்ளனர். ஸ்டாண்டர்டு பயர்வர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி இக்கல்லூரி 1968-இல் தொடங்கப் பெற்றது. பட்டாசுத் தொழிலில் சிறந்து விளங்கும் ஸ்டாண்டர்டு புயர்வர்க்ஸின் கல்வி அறநிறுவனம் இதை நடத்தி வருகிறது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/223
Appearance