222 புகுமுக வகுப்பு: பி.ஏ : பி.எஸ்சி. வகுப்புக்கள் நடைபெறுகின்றன. தமிழ்க் கல்லூரிகள் இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி இக்கல்லூரி, சிங்கப்பூர்ச் செல்வர் இராமசாமி செட்டியார் பெயரால் அவர் மகன் திரு. இராம. பெரிய கருப்பனால் 1967-இல் தொடங்கப்பெற்றது. இரு பாலரும் இங்கு தமிழ்ப்புலவர் வகுப்புப் பயில்கின்றனர். தமிழ்ப்புலவர் வகுப்பு என்பதையே நீக்கி ஆங்கிலத் தோடு கலந்து தமிழ் பி.ஏ. வகுப்பு மட்டுமே இருக்க வேண்டுமென்று மதுரைப்பல்கலைக் கழகம் திரு. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் துணைவேந்தராக இருந்தபோது போட்ட திட்டத்தை முறியடித்து, புலவர் படிப்பு நிலைக்கச்செய்தது இக்கல்லூரியே. ஆர்.சி.எம். கல்லூரி, நயினாபுரம் இக்கல்லூரி திருப்பத்தூரில் 1968-இல் தொடங்கப் பெற்று தமிழ் பி.ஏ. வகுப்பு நடத்திற்று.பிறகு நாச்சியா புரம் சாலையிலுள்ள நயினாபுரத்துக்கு இக்கல்லூரி மாற்றப்பெற்றுள்ளது. புலவர் வகுப்பும் இக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பல்தொழில் கல்லூரிகள் (Polytechnics) அண்ணாமலை பாலிடெக்னிக், செட்டிநாடு. செட்டிநாடு இரயில் நிலையத்தை அடுத்துத் தோற்றப் பொலிவுடன் காணப்படும் கட்டிடங்கள் இக் கல்வி நிலையத்தைச் சேர்ந்தவை. சிறந்த தொழிற் கூடங்களும் இயந்திரங்களும் மாடல்களும் உள்ளன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/224
Appearance