226 மத்திய மின்சார வேதியல் ஆராய்ச்சி நிலையம் அழகப்பாபுரம் காரைக்குடி-3 Central Electro-Chemical Research Institute இது இந்திய அரசாங்கம் நடத்திவரும் தேசிய ஆராய்ச்சி நிலையங்களுள் ஒன்றாகும். டாக்டர் அழகப்ப வள்ளல் 300 ஏக்கர் நிலமும் 5 இலட்சம் ரூபாயும் வழங்கியதால், இந் நிலையத்தைக் காரைக்குடியில் அமைக்க, விஞ்ஞானி டாக்டர் பாட்நகரும் ஜவஹர்லால் நேருவும் இசைந்தனர். செல்வாக்குள்ள பலர் இந் நிலையம் காரைக்குடியில் அமைவதற்குத் தடையாயிருந் தனர்; விஞ்ஞான -- தொழில் ஆராய்ச்சிக் சுழகக் கூட்டத்திலும் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது.பல் கலைக்கழகம் நிறுவும் முயற்சியில் அழகப்பருக்கு இது துணையாக இருக்குமாதலால் காரைக்குடியில் நிறுவு வதையே தாம் விரும்புவதாக ஜவஹர்லால் நேரு அக் கூட்டத்தில் தெள்ளத்தெளியக் கூறி, வள்ளல் அழகப் பரையும் அக்கழகத்து உறுப்பினராக நியமித்தார் 'சுதநதிரா' வார இதழில் எழுதி காசா சுப்பாராவ் முதலிய பலர் இந்நிலையத்தைச் சென்னையில் நிறுவ மேற் கொண்ட முயற்சிகள் நிறைவேறவில்லை. 25-7-1948- இல் இந்த நிலையத்திற்கு ஜவஹர்லால் நேரு கால்கோள் செய்தார்கள். காரைக்குடியில் இந்நிலையத்தை அமைப்பதற்குக் போதிய நீர்வசதியில்லை என்று ஒரு தடை உண்டா யிற்று. பெருங் கிணறுகள் தோண்டி நீருண்மையைக் காட்டினார் அழகப்பர். இவ்வாறு எல்லாத் தடையை யும் விலக்கி காரைக்குடியில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவிய அழகப்பரின் துணிவு பாராட்டுதற்குரியது. அரசாங்கத்தார் 50 இலட்சம் ரூபாய்வரை செல விட்டு, சிறந்த கட்டிடங்களும், வீடுகளும் கட்டி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/228
Appearance