229 வெளிநாடுகளிலிருந்து வாங்கும் முலாம் பூச்சு (நிக்கல், தாமிரம், வெள்ளீயம், குரோமியம்,தங்கம்) மருந்துகளை இங்கு செய்கின்றனர். இரயில் இயந்திரங் களிலுள்ள பிஸ்டன் வளையங்களில் குரோமிய முலாம் பூசி அவை நீண்டநாள் வேலை செய்ய உதவுகிறார்கள். உலோகப் பொருள்களின்மீது எழுத்துக்களையும் வடிவங்களையும் மின்சார முறையைப் பயன்படுத்தி, தெளிவாகவும் பொருளுக்குச் சேதமில்லா மலும் பொறிக்க உதவும் நுட்பமான கருவிகளை இங்கு செய் கிறார்கள். ம் இந்தியாவின் புகழ் மிக்க அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்களுள் ஒன்றாக, காரைக்குடி நிறுவனம் இடம் பெற்றுவிட்டது. உலகத்திலேயே ஓரிரு. நாடுகள் மட்டுமே இத்துறையில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றன. அழகப்பா பல்கலைக் கழகம்: அழகப்பாவின் தலையான வேட்கை தாம் நிறுவிய பல கல்லூரிகளையும் ஒன்று படுத்தி 'அழகப்பா பல்கலைக் கழகம்' என ஒரு தலைமைக்கழகம் அமைப்பது. அவர் தம் இவ்விருப்பத்தை எல்லோரும் அறிவர். தாம் வாழ்ந்த காலத்தே இந்திய அரசோடு கடிதப் போக்கு வரத்துச் செய்து அடிப்படை அமைத்திருக்கிறார். சென்னைப்பல்கலைக் கழகத்தாரும் தமிழ்நாடு அரசினரும் அவர் திட்டத்திற்கு அந்நாளில் இசைவு தெரிவித்தனர். அவர் முயற்சியை மேலும் தொடர்ந்து அழகப்பா பல் கலைக் கழகத்தைக் காண்பது தமிழர் கடனாகும். 1968-இல் அழகப்பர் கல்லூரிகளுக்கு வருகை தந்த போது, தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை 'தமிழ் நாட்டில் அடுத்த பல்கலைக்கழகம் காரைக்குடி,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/231
Appearance