228 மாங்கனீஸ் உலோக உற்பத்தியைப் பற்றிய ஆராய்ச்சி யும். 'மின்சார ரசாயன' முறையில் இங்கு நடைபெறு கின்றது. தயா செயற்கைப் பட்டு, செலபோன் காகிதம் ரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்தும், ராஜஸ்தான் முதலிய இடங்களில் சுரங்கங்களிலிருந்தும் 'சோடியம் சல்பேட்' என்னும் உப்பு ஏராளமாகக் கிடைக்கிறது. இந்த உப்பை மின்சார ரசாயன முறையில் காஸ்டிக் சோடாவாகவும், கந்தக அமிலமாகவும் மாற்றும் வழி களை இங்கு கண்டு பிடிக்கிறார்கள். உப்பு நீரில், எந்த உலோகமும் அதிகநாள் இருக்க முடியாது. கப்பலில் கடல் நீருடன் தொடர்பு கொண் டுள்ள உலோகப் பகுதிகள் துருப் பிடிக்காமல் இருப்ப தற்காக அதில் சிவப்பு வர்ணம் பூசியிருப்பார்கள். இந்தச் சிவப்பு வர்ணத்துக்கு வேண்டிய இரசாயனப் பொடியைத் தயாரிப்பதற்கு பொடாஷியம் குளோரேட், பர்குளேரேட்,பாரா அமினோபினால், தாமிர ஆக்சைடு முதலியவை வேண்டும். இந்தப் பொருள்களை இந்த ஆராய்ச்சிக் கூடத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தித் தயார் செய்கிறார்கள். டிரான்சிஸ்டர் ரேடியோ முதல் கை விளக்கு வரை எத்துணையோ பொருள்களுக்கு 'பாட்டரி தேவைப்படு கிறது. பாட்டரி செய்வதற்கு இன்றியமையாது வேண்டுவது மாங்கனீசு டை ஆக்சைடு. வெளிநாடு களிலிருந்து வரவழைக்கப்படும் இத் தாதுப் பொருளை இந்த நிலையத்தில் செய்கிறார்கள். இந்திய இரயில்களில் இங்கு செய்த பாட்டரியைப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/230
Appearance