உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 இருந்து வருகிறது. இதன் வாயிலாக ஆண்டுதோறும் பல்லாயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அந்நாளில் (திருநெல்வேலி) மாவட்டக் கலெக்ட ராக இருந்த பென்னிங்டன துரை பெயரினை, இந் நூலகத்துக்குச் சரவண முத்துப்பிள்ளை சூட்டினார். ஆங்கில இலக்கியத்திலும் சட்டத்துறையிலும் சிறந்த நூல்கள் இந் நூலகத்தில் உள்ளன. 162-இல் இந் நூலகத்துக்கு ஒரு புதிய கட்டடமும் கலைவிழாக்கள் நடத்துவதற்கேற்ற ஒரு மண்டபமும் ஒரு லட்சம் ரூபாயச் செலவில் கட்டிமுடிக்கப் பெற்றிருக்கின்றன. 35 ஆண்டுகளாக இராசபாளையம் பண்ணையார் இராமசுந்தரம்பிள்ளை. இந்நூலக ஆட்சிக் குழுவின் செயலாளராக இருந்து வருகிறார். விளையாட்டுக்கள் இராமநாதபுர மாவட்டத்தில் சில பகுதிகள் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குகின்றன. விருது நகரில் கூடைப் பந்துக் கழகம், மாவட்டக் கால் பந்தாட்டக் கழகம் ஆகியனவும் சிவகாசியில் காரனேசன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் செயற்பட்டு விளையாட்டுக்களை ஊக்குவிக்கின்றன. . சிவகங்கையில் தம்புதுரை, ஆர்.எம்.சுந்தரம் என்ற ஐ.சி.எஸ். காரர்கள் திவானாக இருந்த நாளி லிருந்து விளையாட்டுக்களில் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. புதிய அரண்மனை அருகே ஒரு ஸ்டேடியம் இருக்கிறது. காரைக்குடி அழகப்பா கல்லூரிவட்டத்தில், பவநகர் ஸ்டேடியம் ஏற்பட்டிருக்கிறது. மாவட்ட விளையாட்டுக் கழகம் இந்நகரில் இயங்குகிறது. அனைத்திந்தியக் கால் பந்தாட்டப் போட்டிகள் நிகழ்ந்தன.