உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 மண்டபத்தில் சர்வதேச நீச்சல்போட்டிகள் நடை பெற்றிருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் இத்தகைய போட்டிகளை நடத்த வேண்டும் என்று, நீச்சல்வீரர் மிகிர் சென் கூறியுள்ளார். இம்மாவட்டத்தினராகிய திரு. எம்.ஏ.சிதம்பரம். இந்தியாவில் கிரிக்கட் முதலிய பல விளையாட்டுக்கள் பெருகப் பேருதவி புரிந்து வருகிறார். 'சென்னையில் சிறந்த ஸ்டேடியம் இவர் முயற்சியால் உருவாகி வருகிறது. அழகப்பா உடற்கல்விக் கல்லூரி அழகப்பாபுரம், காரைக்குடி-4 (Alagappa College of Physical Education) சென்னை ஒய்.எம்.சி.ஏ. கல்லூரிக்கு அடுத்த படியாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட உடற் கல்விக்கல்லூரி இதுவே ஆகும். இது 28-8-1956-இல் அழகப்பர் வள்ளன்மையால் தொடங்கி வைக்கப்பெற்றது. சென்னைப் பல்கலைக்கழகத்து உடற்கல்வி டிப்ளமா. தமிழ்நாடு அரசாங்கம் வழங்கும் உடற்கல்வி உயர்நிலை ஆசிரியர் சான்றிதழ், தமிழ்நாடு அரசாங்கம் வழங்கும் உடற்கல்வி இளநிலை ஆசிரியர் சான்றிதழ் ஆகியவை பெற இக்கல்லூரியில் பத்துமாதப் பயிற்சி தரப்படு கிறது. மொத்தம் 140பேர் சேர்த்துக் கொள்ளப்படு வர். உணவு விடுதி உண்டு. அங்கு பயிலுபவர்க்கு, மாநில அரசு சில சிறு சலுகைகள் வழங்குகிறது. சிறந்த நூலகம், உடற்பயிற்சிக் கூடம். கா பந்தாட்ட மைதானங்கள் இரண்டு, ஹாக்கி மைதானங்கள் மூன்று, வாலிபால் முதலிய பந்துக்கு மேற்பட்ட ஆட்டங்களுக்கு ஏராளமான விளையாடு மிடங்கள் இவற்றுடன் கூடியது இந்தக் கல்லூரி. இ -15