236 வருகின்றனர். இதன் தொடர்ச்சியே, தமிழ் இசைச் சங்கம் நடத்தி வரும் பண் ஆராய்ச்சிப் பணி. மாநாடுகள் தமிழ் இசைக்கிளர்ச்சி நாட்களில் 1941 முதல் 1944 வரை இம்மாவட்டத்தில் ஏராளமான ஊர்களில் தமிழ் இசை மாநாடுகள் கூடின. இத்தகைய மாநாடுகளுள் ஒன்று தேவகோட்டையில் நடைபெற்றுத் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தது. அந்நாளில் லெனின்கிராடு கோட்டையை ஜெர்மானியர் முற்றுகையிட்டனர். "மக்கள் கண்களெல்லாம் லெனின்கிராடு கோட்டை யிலும் தேவகோட்டையிலும் உள்ளன' என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். ரா. . ஸத்குரு ஸ்ரீ தியாகப் பிரும்ம மஹோத்ஸவ ஸ்பா, தேவ கோட்டையில் 1942-இல் தோன்றிற்று. ஆண்டு தோறும் மாசிமாதத்தில் இங்கு நான்கு நாட்களுக்கு இசை விழாக்கள் நிகழ்கின்றன. புரவலர்கள் இசைப்புலவர்களுக்கு ஆதரவு தந்துவருபவர்களுள் இராமநாதபுரம் சேதுபதிகளும் சேற்றூர்க் குறுநில மன்னரும் நகரத்தார்களும் குறிப்பிடத்தக்கவர்கள். சேதுபதிகள் ஆதரவு பெற்றவர் பட்டியலைப் பின்னர் தருவோம். நவராத்திரி விழாவில் இராமநாதபுரத் திலும் புத்தாண்டுப் பிறப்பு அன்று காரைக்குடியிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சேற்றூர்க் குறுநிலமன்னரான திருவனாத்துரை. சிவபிரகாசத் இசைப்புலவராகவும் புரவலராகவும் விளங்கினார்.இவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த வட மலைத் திருவனாத சேவகப் பாண்டியத் தேவர், சென்னை 1 .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/238
Appearance