13. இசைக்கலை இம்மாவட்டத்தில் இசைக்கலை தொன்று தொட்டு வளர்ந்து வருகிறது. தமிழ் இசை இயக்கம் இம் மாவட்டத்திலேயே, அரசர் அண்ணாமலைச் செட்டியாரின் மணிவிழா 1941-இல் கானாடுகாத்தானில் நிகழ்ந்த போது, 'கரு' வாகி அடுத்த ஆண்டில் சென்னையில் உருவம் பெற்றது. மன்றங்கள் தேவ கோட்டையிலும் காரைக்குடி அழகப்பர் கல்வி வட்டத்திலும் தமிழ் இசைப் பள்ளிகள் உள்ளன. சிவகாசியில் 13-4-1957இல் ஆரம்பிக்கப்பெற்ற இசைக் கலைப் பயிற்சிப்பள்ளி இசை. நாடக, நாட்டியக்கல்வி புகட்டி வருகிறது. இப்பள்ளி சில நூல்களையும் வெளி யிட்டிருக்கிறது. தமிழிசை அரங்குகளையும் தேசிய நாடகங்களையும் வில்லிசைமூலம் காந்திமகான்கதையை யும் நடத்தியிருக்கிறது. இராஜபாளையத்தில் காந்தி கலைமன்றம் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. செல்வர்களான நகரத்தார்களின் திருமணங்களில் பாடி, இசைப் புலவராகப் பயிற்சியும் ஆதரவும் புகழும் பெற்றவர்கள் மிகப்பலர். வானொலி தோன்றுவதற்கு முன், தமிழ்நாட்டு இசைவாணர்க்குச் செட்டிநாட்டில் தான் ஓரளவு உறுதியான நிலையான வருவாய் கிடைத்தது. தமிழ் நாடெங்கும் இம்மாவட்டத்தினர். நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தேவாரப் பள்ளிகளை நடத்தி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/237
Appearance