உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திற்குக் கீர்த்தனை வெளியிட்ட மழவை சிதம்பர பாரதி யும் அவர் பேரனும் இசைப்புலவருமான மழவராய னேந்தல் சுப்பராம பாகவதரும் இவ்வூரினர். இம்மாவட்டத்தில் இசைப்பாடல் அமைத்த பலரும் உள்ளனர். சுவாமி சுத்தானந்த பாரதியாரும் கவியரசு கண்ணதாசனும் குறிப்பிடத்தக்கவர்கள். . வற்றாயிருப்பைச் சேர்ந்த குற்றாலம் அண்ணாவி, அருப்புக்கோட்டை கணேசன் ஆகிய நாதசுவரப் புலவர் களும், பிடில் குன்னக்குடி வைத்தியநாதனும் மிருதங்கம் இராமநாதபுரம் முருகபூபதியும், காரைக்குடி வீணை சாம்பசிவ ஐயரும், வாய்ப்பாட்டுப் புலவர் சாத்தூர் ஏ.ஜி.சுப்பிரமணியமும் இம்மாவட்டத்தினர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழிசைக் கல்லூரி யிலும் சென்னைத் தமிழிசைக் கல்லூரியிலும் பயின்று இம்மாவட்டத்து இளைஞர் பலர் இசை வளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.