14. மருத்துவ வசதிகள் மாவட்ட மருத்துவமனை யான மாவட்ட மருத்துவமனை இராமநாதபுரம் நகரில் இருந்து வருகிறது. பல்லாண்டுகள் இம்மனைக்கு வசதி கட்டிடங்களோ போதிய இடமோ இல்லா திருந்தது.இக்குறைகள் இப்போது தான் நீங்கப் பெற் றிருக்கின்றன. அரசினரின் திட்டப்படி இம்மனை நன்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிற மருத்துவமனைகள் வட்டத் தலைநகர்களிலும் நகராண்மைக் கழகங் களுள்ள நகர்களிலும் நெடுங்காலமாக மருத்துவமனைகள் இருந்தன. ஆனால் மக்கள் போய்ப் பிணி தீர்த்துக் கொள்ள அங்கு வசதி இல்லை. இந்த நிலை 1970-க்குப் பிறகு மிகவும் திருந்தியிருக்கிறது. பல நகர்களில் தொழிலாளர் நலத் திட்டத்தில் மருத்துவ மனைகள் ஏற்பட்டுள்ளன. இராஜபாளையம், விருதுநகர், காரைக் குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகியவற்றில் அரசினர் மருத்துவமனைகளுக்குப் புதிய கட்டிடங்கள் அழகுறக் கட்டப் பெற்றிருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் குடும்பக் கட்டுப்பாடு நிலையங்களும் ஏற்பட்டுள்ளன. இவற்றை அரசாங்க மருத்துவமனை களாக மாற்றி அமைப்பது மக்களுக்கு நலம் தரும். .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/241
Appearance