242 1967 முதல் குட்ட நோய் ஒழிப்புப் பணியிலும் இம்மருத்துவமனை கவனஞ் செலுத்தி வருகிறது. வெளி யூர்களில் இதற்கென நடமாடும் மருத்துவமனை பணி புரிகிறது. குட்ட நோய் மருத்துவத்துக்கெனத் தனிக் கட்டிடமும் வெளி நாட்டு உள் நாட்டு மருத்துவர்கள் உதவியும் புதிய கருவிகளும் இங்கு உள்ளன. பல துறைகளில் மருத்துவப் பணியைப் விரிக்கவும் பெருக்கவும், நோயாளிகளுக்காகச் செய்யப்படும் உணவு தூய்மையாக இருப்பதற்காக இயந்திரச் சமையல் ஏற்பாடுகள் செய்யும், பேக்கரி அமைக்கவும் சுவீடன் நாட்டினர் 1969-இல் முப்பது லட்சம் ரூபாய் வழங்கியுள் ளனர். இம்மருத்துவமனையை அடிப்படையாக வைத்து மருத்துவக் கல்லூரி தொடங்கலாமென்று 1955-இல் டாக்டர் ஏ.எல். முதலியார்,டாக்டர் பி.வி. செரியன் ஆகியோர் அரசினருக்கு அறிவித்தனர். அதையொட் டியே மருத்துவக் கல்லூரி நிறுவ வள்ளல் அழகப்பர் முனைந்தார். எனப்படும் எக்ஸ்ரே பகுதியும், பிள்ளைப்பேறு மருத்துவமும். குறிப்பிடத்தக்கன. கார்டியக் சர்ஜரி அறுவை மருத்துவத்தை சென்னையிலோ வேலூரிலோ செய்யப்படும் முன்னரே இங்கு டாக்டர் வால்டன் என்ற சுவீடிஷ் நிபுணர் செய்தார். இம்மருத்துவமனை நடத்த ஆண்டுதோறும் 15 லட்சம் ரூபாய் செலவாகிறது. மருத்துவமனையில் பணிபுரியும் அனைவர்க்கும் வீடு கள் கட்டப்பெற்றுள. அவர் தம் குடும்பத்தினர்க்குக் கல்வி வசதியும் பிற பல சலுகைகளும் உண்டு. சுவீடிஷ் நாட்டினர்க்குக் கோடைக் கானலில் தங்குவதற்கு வீடு களும் அவர்கள் குழந்தைகள் பயில அங்கு சுவீடிஷ் பள்ளி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/244
Appearance