243 யும் உள்ளன. டாக்டர்கள் வெளியூர்களிலும் வெளி நாடுகளிலும் சென்று குறிப்பிட்ட பகுதிகளில் பயிற்சி பெறுகின்றனர். கோள். . பிணிபோக்குவதே இந்த மருத்துவமனையின் குறிக் எனவே, இறந்தபின் பிணத்தை அறுத்துப் பார்த்தல்,குத்து வெட்டு பற்றி நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுவது, மருத்துவமனைக்கு வெளியே மருத்துவம் பார்ப்பது முதலிய வேலைகளில் இங்குள்ள டாக்டர்கள் ஈடுபடுவதில்லை. லேபரட்டரி டெக்னிசியன்களுக்காக இந்த மருத் துவமனை நடத்தும் ஓராண்டுப் பயிற்சியை கிறிஸ்டியன் மெடிகல் அசோசியேசன் ஆப் இந்தியாவுக்குக் கட்டுப் பட்ட மருத்துவமனைகள் யாவும் ஏற்கின்றன. 1970-72 ஆம் ஆண்டுகளில் சுவீடன் நாட்டு உதவி யுடன் இங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு பல துறைகளில் இந்த மருத்துவனை பெரு முன்னேற்றம் அடைந்த வண்ணமாய் இருக்கிறது. நெற்குப்பை, சிங்கம்புணரி காரைக்குடி போன்ற வெளியூர்களில் இம்மருத்துவமனை யினர் குறிப்பிட்ட கிழமைகளில் சென்று சில நோய் களுக்கு மருத்துவம் செய்கின்றனர். புகழ் பெற்ற கண் டாக்டர் ஜோசப் இந்த மருத் துவமனையின் தலைவராக உள்ளார். நர்சிங் பள்ளி : திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் நர்ஸ் தொழிலுக்குப் பயிற்சி அளிக்க ஒரு பள்ளி நடை பெறுகிறது. தமிழ் நாட்டிலிருந்தும் கேரளத்திலிருந்தும் நங்கையர் இங்கு பயின்று Christian Medical Association of India நடத்தும் தேர்வு எழுதி நாடெங்கும் மருத்துவ மனைகளில் பணிபுரிகின்றனர்,
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/245
Appearance