244 குருடர் பள்ளி: து இம்மருத்துவமனையில் குருடருக்காக ஒரு பள்ளி இருக்கிறது. இவர்கள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் வரை எழுதி,படிக்கும்போது இடது பக்கமிருந்து வலது பக்கமாகப் படிக்கிறார்கள். பிரெயில் முறைப்படி அச்சிட்ட நூல்கள் பாடமாக உள்ளன. முதல் வகுப்புக் குரிய நூல்கூட மிகக் கனமாக கையால் தூக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. ஊமையர் செவிடர் பள்ளி: இப்பள்ளி மானாமதுரையில் இருக்கிறது. நாட்டு மருத்துவம் : எலும்பு முறிவு, மூட்டுப் பிசகு, இளம்பிள்ளை வாதம் ஆகியவற்றுக்கு துளாவூர் வைத்தியர்கள் தலைமுறை தலைமுறையாகச் சிறந்த முறையில் குணப்படுத்துகிறார் காரைக்குடியிலும் குன்றக்குடியிலும் தமிழ் நாட் டின் வேறு சில ஊர்களிலும் துளாவூர் வைத்தியர்கள் உள்ளனர். துளாவூர் குன்றக்குடிக்கு அருகேயிருக்கிறது. கள். திருக்கோட்டியூரில் சித்தவைத்தியம் புகழ் பெற்றது கீழச் சிவற்பட்டி எண்ணெய், குழந்தைகளுக்கு மிகவும் பயன்படுகிறது. வேர்களை நச்சுப் போட்டு இதைத் தயாரிக்கிறார்கள். மூலிகைகளைக் கொண்டு செய்த தைலங்களைப் பயன்படுத்தி பிள்ளையார் பட்டியில் பல நோய்களுக்கு மருத்துவம் செய்கின்றனர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/246
Appearance