உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.ஊர்களைப் பற்றிய குறிப்புக்கள் இப்பகுதியில், மாவட்டத்திலுள்ள பற்றிய செய்திகளைத் தெரிவிப்போம். ஊர்களைப் ஒவ்வொரு வட்டத்தையும் தனித்தனியே ஆராய்ந்து முதலில், வட்டத்தைப் பற்றிய பொதுவான விவரங்களைக் கூறுவோம். பிறகு, வட்டத்திலுள்ள நகரங்களைக் காண்போம். நகரியம் இருப்பின் அதை யும் பார்ப்போம். பின்னர், ஊராட்சி மன்ற ஒன்றியங் களில் உலாவருவோம். ஒன்றியத்தின் தலைநகர் பேரூராட்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்ட பின்னர் ஊராட்சி மன்றம் உள்ள ஊர்களை தருவோம். இம் மாவட்டத்தில் 32 ஊராட்சி மன்ற ஒன்றியங் கள் உள்ளன. ஒவ்வோர் ஒன்றியமும் சாரசரி 380 சதுர கி.மீ. பரப்பும், ஏறத்தாழ 73,000 மக்களும் கொண்டது. அந்தந்த ஒன்றியம் செய்ய வேண்டிய வேலைகளை வரையறுக்க ஒரு கவுன்சில் உண்டு. கவுன்சி லின் தீர்மானங்களைச் செயலாற்றவும் அன்றாட வேலை களைச் செய்யவும் அதிகாரம் படைத்த ஆணையர் நிய மிக்கப்பட்டிருக்கிறார். கவுன்சில், அந்த ஒன்றியத்து ஊராட்சி மன்றங்கள் பேரூராட்சிகள் ஆகிய வற்றின் தலைவர்களைக் கொண்டது. இவர்களைத் தவிர, பெண்களும் அட்டவணையில் குறிப்பிட்ட சாதியினரும் மும்மூன்று பேரைக் கவுன்சில் றுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஆணையர் அரசாங்கத் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக வேளாண்மை, கூட்டுறவு, தொழில், சமுதாயக் கல்வி. தாரால் $