உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ஊராட்சி மன்றம் ஆகிய துறைகளுக்கு அலுவலர் உள்ள னர். கிராமங்களின் தொகுப்புகளில், கிராம சேவகரும் கிராம சேவகிகளும் பணிசெய்கின்றனர். சில ஒன்றி . யங்களுக்குச் சேர்த்து, பொதுவாகக் கால்நடை மருத்துவர், கல்வித்துறை அலுவலர், மின்சாரம், சாலை மேற்பார்வை, பொதுப்பணித் துறைகளுக்குத் தனித் தனியே பொறியியல் அலுவலர் ஆகியோர் உள்ளனர். விதைகளை வைத்திருந்து உழவர்களுக்கு வழங்க, பொது மக்களில் ஒருவர் ஒவ்வொரு ஊரிலும் கிராம சகாயக்' ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒன்றிய அலுவலகங்களில் செய்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; கிராம் நல வேலைகளை விளக்கும் நூல்களும் படங்களும் இங்கு வைக்கப்படுகின்றன. உயர்நிலைப் பள்ளிகளும், மாவட்ட நெடுஞ்சாலை களும், படுக்கை வசதியுள்ள மருத்துவ மனைகளும் ஒன்றி யங்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. இவை தவிர. மாவட்டக் கழகங்களின் அதிகாரிகள் அனைத்தும் ஒன்றியங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.