கிழக்கு இராமநாதபுரம் வளர்ச்சி மாவட்டம் 1. இராமநாதபுரம் வட்டம் இந்த வட்டம் இம்மாவட்டத்தில் தென்கிழக்குக். கோடியில் நாக்குப் போல் அமைந்தது. முப்புறம் கடலால் சூழப்பட்டது. இதனால் இங்கு கொடுமையான வெப்பம் கிடையாது. கடலில் புயல் உருவாகுமபோது காற்றும் மழையும் இருக்கும். இங்கு மழை பெய்து வெள்ளம் ஏற்படுவது உண்டு. மதுரை மாவட்டத்தில் மழை பெய்வதால் பெரியாறு. வைகை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுகிறது. கலிங்கு இல்லாததால் கண்மாய்களில் உடைப்பு ஏற்படுகிறது. நீர்ப் பரப்புப் பகுதி எவ்வளவு என்பதைப் பற்றிய செம்மையான கணக்கு எடுக்கப்படாததால் சில கண் மாய்களின் அமைப்பு சரியான நிலையில் இல்லை. பல சிற்றூர்கள் அந்நாளில் தண்ணீரில் மூழ்குகின்றன. மிளகாய், மல்லிச் செடிகள் அழுகி விடுகினறன. தீவு களுக்குச் செல்ல, போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல இயலாமல் தவிக் கின்றனர். புயல் காற்றால் அவர்கள் தங்கள் வீடுகளை யும் இழந்து இராமேசுவரம் கோவிலில் பல நாள் தங்குவது வழக்கம். கடும் காற்று, அடை மழை, குளிர் இவற்றால் ஆடு மாடுகள் இறக்கின்றன. வாயில்லா உயிரினங்களின் நலம் பேணும் எஸ்.பி.சி.ஏ. போன்ற அமைப்புக்கள் இவ்வட்டத்தில் பணியாற்றலாம்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/249
Appearance