248 இவ்வட்டத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குமேல் முஸ்லிம் கள் உள்ளனர். கிறிஸ்தவர்களும் பல்லாயிரம் பேர் வாழ்கிறார்கள். பொதுவாக இது மறவர் நாடு. மறவர் போர்ப் பயிற்சி செய்யும் களரிகள் இவ்வட்டத்தில் உள்ளன. இவ்வட்டத்தின மக்கள தொகை இரண்டு லட்சம். ம்மாவட்டத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை யுடையது இவ்வட்டமே. எட்டிவயலிலிருந்து ஆற்றங் கரை வரை இருபது மைலுக்கு வைகை ஆறு இவ்வட்டத் தில் பாய்கிறது. ஒரு சில பகுதிகளில் நன்செய் வேளாண்மையும் கீழ்காடு பகுதியில் புனசெய் வேளாண்மையும் நடைபெறுகிறது. இராமேசுவரம் தீவு, குருசடைத் தீவு. முயல் தீவு, கச்சத் தீவு முதலிய பல தீவுகள் இவ்வட்டத்தில் உள்ளன. பல பகுதிகளில் மண் உப்பாய் இருப்பதால்,உப்புக் காய்ச்சுவது ஒரு தொழிலாக நடைபெற வில்லை. சுல்தானகள், மரக்காயாகள், சாமியார்கள் மிகுந்தது இவ் வட்டம். சாமியார்கள் என்பது பரம்பரைப் பட்டம்; அவர்கள் துறவிகள் அல்லர். இராமநாதபுரம் அரசரின் உறவினர் அக்காரணத்தால் ஆங்காங்கு செல்வாக்குப் பெற்றுள்ளனர். அவர்களை, மரியாதையாக 'சாமி' என்று பிறர் அழைத்தனர். சாமி ஆர் விகுதி பெற்றுச் சிறப்புப் பெயராய் வழங்கிவருகிறது. பல ஊர்களில் சுல்தான்கள் உள்ளனர். சித்தார் கோட்டை சுல்தான் சக்கரக்கோட்டை சுல்தான் பனைக்குளம் சுல்தான் மண்டபம் மரக்காயர்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/250
Appearance