உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 எங்கும் இராமநாதபுரம்: ஊர்ப்பெயர் மறவர்வீரத்தைக் குறிக்கிறது. இந்நாளில் எங்காவது கலகங்களை அடக்கு வதற்குப் படை தேவைப்பட்டால் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் அல்லது மலபார் ஸ்பெஷல் போலீஸ் படையை அரசினர் அனுப்புகின்றனர். இது போல பல நூற்றாண்டு தென்னிந்தியாவெங்கும் படையெடுக்கவும் களாக அமைதியைப் பாதுகாக்கவும் ஆட்கள் தேவைப்பட்ட போது இராமநாதபுரத்திலிருந்து மறவர் படை அனுப் பப் பெற்றது. அந்த ஊர்களில் இவ்வீரர்கள் தங்கிய இடங்கள் இராமநாதபுரம் என்று பெயர் பெற்றன. எனவே இராமநாதபுரம் என்னும் சொல் படை வீடு அல்லது கண்டோன்மெண்டு என்று பொருள் படும். இராமநாதபுரம் என்னும் பெயருள்ள ஊர்கள் இருக்கும் இப்பகுதிகள் சிலவற்றைக் கூறுவோம். (!) திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் வாசுதேவ நல்லூர் ஒன்றியம். (2) திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் தூத்துக்குடி ஒன்றியம். (3) மதுரை மாவட்டம் வெ. இராமநாதபுரம். திண்டுக்கல் அருகே (4) செங்கற்பட்டு மாவட்டம் திருவள்ளுர் வட்டம் பென்னலூர்ப்பேட்டை அருகே. (5) கோயமுத்தூர் நகரில் ஒரு பகுதி. (6) மைசூர் மாநிலத்தில் குடகுப் பகுதியில் இராம நாதபுரம் என்று ஓர் ஊர் உண்டு. இது ஆதிசங்கரர் எந்திரம் பிரதிஷ்டை செய்த தலம். ன்னும் பல ஊர்களும் உள்ளன.