ஊர் 252 இம்மாவட்டத்தார் வெளி நாடுகளில் தாங்கள் குடியேறிய பகுதிகளிலும் இராமநாதபுரம் என்னும் பெயரில் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். மலேசியாவில் நெகிரி செம்பிலான் இராச்சியத்தி லுள்ள ஒரு சிற்றூரின் பெயர் இராமநாதபுரம்; இங்கு வாழும் தமிழர்கள், வேறு (ரப்பர்த்) தோட்டங்களில் வேலை செய்து கொண்டு இங்கு தங்கள் சொந்த நிலங் களில் கலப்புப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய பொருளாதார நிலை பற்றி ஆஸ்தி ரேலியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்திருக் கிறது.* வரலாறு: சேதுபதிகளின் உறைவிடமாய் இருப்பது இந்நகரின் சிறப்பு. சேதுபதிகளின் ஆதி வரலாறு தெளி வாகத் தெரியவில்லை. காலத்தால் அவர்கள் அவ்வளவு பழமையானவர்கள். காசி விசுவநாதரை வழிபடுபவர்கள் காசி மகாராஜாவையும் காட்மண்டு பசுபதிநாதரை வழிபடுபவர்கள் நேபாள மன்னரையும் வழிபடுவது போல இராமேசுவரத் தலயாத்திரையை மேற்கொண்ட வர்கள் இராமநாதபுரத்திற்கு வந்து சேதுபதிகளை வணங்கி வழிபடுவது பல நூறு ஆண்டுகளாக நேபாளத் திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வருபவர்களின் மரபு. சில ஆண்டுகளுக்கு முன் வரை இராமநாதபுரம் ஒரு ஜமீனாக, தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய ஜமீன் களில் ஒன்றாக இருந்தது. இதன் பரப்பு 2,014 சதுர
- இராமநாதபுரம் பரிசோதனை - மலேயாவில் தோட்டம்
பண்ணைத் தொழிற்சாலை சமூகத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு-K. R. ஜெயின், சமூகவியல் துறை, நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா. .