260 காரர்கள் படையனுப்பினா. அப்படைகள் யாவும் இங்கிருந்து நாவாய் ஏறி இலங்கையிலுள்ள மன்னார் என்னுமிடத்தில் இறங்கினர். அக்காலத்திய கல்வெட்டுக் களில் இது காணப்படுகிறது, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை அரசினர் ஆண்டுதோறும் சில மாதங்கள் இவ்வூரில் குவாரண்டைன் 'காம்பு' நடத்தினர். தமிழ் நாடு அரசாங்க வேளாண்மைத் துறையினர் 1961-இல் நான்கு ஏக்கர்ப் பரப்பில் தென்னம் பண்ணை தொடங்கி தென்னம்பிள்ளைகளை வழங்கி வருகின் றனர். ஊராட்சி ஒன்றியத்தார் ஒரு பழத்தோட்டம் நடத்துகின்றனர். இவ்வூரில் வாழ்பவர்களில் பாதிப்பேர் முஸ்லிம்கள். மேலப்பள்ளி வாசல் என்ற பெரிய மசூதியும் கீழப்பள்ளி வாசல் என்ற சிறிய மசூதியும் இங்கு உள்ளன. கரை யோரமாக மீன் பிடிப்பதும் சங்கு குளிப்பதும் இங்கு நிலவும் தொழில்கள். திருப்புல்லணை ஊராட்சி ஒன்றியம். இது 110 சதுர மைல் பரப்பும், 70,000 மக்களும் கொண்டது. கீழக்கரைப் பேரூராட்சியும் 32 ஊராட்சி மன்றங்களும் உடையது. . கீழக்கரை: இராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவு.சிறு துறைமுகம். அருகேயுள்ள கரையோரப் பட்டினங்களுக்கு இங்கிருந்து படகுகளில் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. பாண்டியர்களின் பண் டைத் துறைமுகமான 'கொற்கை' என்பது இவ்வூரே என்றும் இவ்வூர் வழியாக கிரீஸ், ரோம், சீனா முதலிய
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/262
Appearance