உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 நாடுகளுக்கும் பாண்டி நாட்டுக்கும் வாணிகம் நடந்த தாயும் சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வேறு சிலர் முத்து, பவளம், வாசனைப் பொருள் முதலியன இங்கிருந்து வெளி நாடுகளுக்குச் சென்றன என்பர். இக்காலத்தில் திசை தவறிவரும் சிறு கப்பல்கள் இத் துறைமுகத்தில் தங்குகின்றன. இவ்வூர் சில காலம் டச்சுக்காரர்கள் கையில் இருந் தது. அவர்கள் நடத்திய பழைய தொழிற்சாலை ஒன்றின் அறிகுறிகளை இங்கு இன்றும் காணலாம். இவ்வூர்க் கடற்கரை அருகே தமிழ் மூவேந்தர்களின் நாணயங்களும் மேனாட்டு நாணயங்களும் அகப்பட்டிருக் கின்றன. 16-ஆம் நூற்றாண்டில், திருச்செந்தூரில் வாழ்ந்த பிராமணர் பலர் இவ்வூருக்குக் கொண்டு வரப்பட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவச் செய்யப்பட்டனர் என்பர். இந்நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து பல வணிகர் கள் மரக்கலங்களில் கடற்கரைப் பகுதிகளுக்கு வந்தனர். அவர்களே பிற்காலத்தில் மரக்காயர் ஆயினர். அவர் களில் சிலர் இங்கு தங்கி, சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியுடன் பெரிய அளவில் வியாபாரம் செய்தனர். இத்தகைய சிறப்புக்குரிய வணிகர்களில் ஒருவரான சையது ஜாதிர் என்ற பெரிய தம்பி மரக்காயர் நொண்டி நாடகம் என்ற இலக்கியத்தைப் பாடியுள்ளார். சென்னப் பட்டினம் என்ற பெயர் முதல் முறையாக தமிழ் நூல் ஒன்றில் காணப்படும் பழமையான தமிழ் இலக்கியம் இதுவே என்று ஆராய்ச்சியாளர் கூறுகினறனர். இவ் செந்தமிழ் வளர்த்த சீதக்காதி வள்ளல் வூரினரே. சீறாப்புராணம் இயற்றிய உமறுப்புலவரோடு, நமச்சிவாயப் புலவர், கந்தசாமிப் புலவர், படிக்காசுப் புலவர் ஆகியோரையும் ஆதரித்தவர்.