272 நாகூரில் எடுப்பர். பெரியவர் ஒருவர் அடங்கியிருக்கிறார். சந்தனக்கூடு எடுக்கும்போது இங்கும் இவ்வூரினர் பலர் மலேயாவில் 'தேத்தண்ணிக்கடை வைத்திருக்கின்றனர். கிருஷ்ணனுக்கு எட்டு மனம் உண்டென்றும் எனவே இந்த ஊர்ப் பெயர் 'எண்மனம் கொண்டான்' என்று சிலர் எழுதுகிறார்கள். மண்டபம்: இரயில் நிலையமுள்ள ஊர். எல்லா மாதங்களிலும் தென்றல் வீசுகிறது. பல சிறு தீவுகள் தென்மேற்குக் காற்றின் கொடுமையிலிருந்து இவ் வூரைக் காப்பாற்றுகின்றன. குறிப்பாக வடகிழக்குப் பருவக் காற்றின்போது இங்கு பெரும்புயல் அடிக்கும். கடலுக்கும் கரைக்கும் இடையே அழுத்தமான பவளப் பாறை விரிந்தும் பரந்தும் கிடப்பதால் இப்பகுதி புயல் சேதத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது. மரக்கலத் தொழிலை பல தலைமுறையாகச் செய்து வரும் மரக்காயர்களும் மீன்பிடிப்பவர்களும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் முஸ்லிம் களே. சேதுபதிகள் இராமேசுவரத்துக்குக் கால்நடை யாகச் செல்பவர்களுக்கு வசதியாக ஒரு கல்மண்டபமும் தெப்பக்குளமும் கட்டினார்கள். அதனால் இவ்வூருக்கு 'மண்டபம்' என்ற பெயர் ஏற்பட்டது; தெப்பக்குளத் தையும் மண்டபத்தையும் இன்றும் காணலாம். எஞ்சிய பகுதியெல்லாம் நூறு ஆண்டுகளுக்கு முன்வரை காடாகவே இருந்தது. இரயில்பாலம் போட்டிருக்கும் இடம் கால்நடை யாகவே செல்லக்கூடிய பகுதியாயும் படகுகள் தங்கும் தோணித்துறையாகவும் இருந்தது. ஒரு புயலின்போது
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/274
Appearance