உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இரு கடல்களும் பொங்கி எழுந்து ஆழமான ஜலசந்தி உண்டாயிற்று. சுற்றியிருந்த காடுகளை அழித்தபிறகு இங்கு அதனால் குடியேறியவர்கள் வெற்றிலை பயிரிட்டனர். இவ்வூருக்கு 'வெற்றிலை மண்டபம் என்ற பெயரும் ஏற்பட்டது. இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆதரவால் மரக்காயர்களில் ஒரு குடும்பம் பெரும்புகழ் பெற்றது மண்டபமரக்காயர்' என்ற பெயர் அக்குடும்பத்தாருக்கு வழங்கி வருகிறது. மண்டப மரக்காயர் சென்னை மாகாணத்திலேயே கவர்ன்மெண்டைத் தவிர எவருக்குமில்லாத தனிப்பட்ட ஒரு தீவுக்குச் சொந்தக்காரர். தென்சமுத்திரத்திலே மண்டபத்துக்கு சுமார் 7 மைல் தூரத்திலுள்ள முயல் தீவு என்பது அதன் பெயர். அவர்களுக்கு ஏராளமான பாய்மரக் கப்பல்களும் தோணிகளும் படகுகளும் இருந்தன. இந்தப்பகுதிக்கே மீன்பிடி தொழில் உற்பத்திக்குப் பெரும் உதவியாக இருந்தார்கள். யாத்ரீகர்களைத் தம் படகுகளில் ஏற்றிப் பாம்பன், இராமேசுவரம் கொண்டுபோய் விட்டனர், நிலக்கரி, மரம், அரிசி போன்ற பல சாமான்கள் நீராவிக்கப்பல் மூலம் வருவதை மண்டபத்தில் இறக்குமதி செய்து கொடுப்பது போன்ற தொழில்கள் இவர்களால் நடத்தப் பட்டதால் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவும் மண்டபம் ஒரு துறைமுகமாக ஏற்படுவ தற்கும் உதவியாக இருந்தார்கள். இதனால் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட மண்டபம் மாநகருக்கு ஒரு கடல் அரசனாகவும் புகழப்பட்டார்கள்.